மாளிகைக்காடு பகுதியில் குளிரூட்டப்பட்ட மாட்டிறைச்சிகள் விற்பனை
குளிரூட்டப்பட்ட மாட்டிறைச்சிகள் புத்தாண்டு காலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட மாட்டிறைச்சி கடைகளில் இன்று இவ்வாறு குளிரூட்டப்பட்ட இறைச்சி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.கடந்த திங்கட்கிழமை போயா விடுமுறை மற்றும் இன்று தைப்பொங்கல் தினம் ஆகையினால் மாடுகள் பற்றாக்குறை காரணமாக ஏலவே எஞ்சிய இறைச்சிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
குறித்த இறைச்சி வகைகள் மனித பாவனைக்கு உகந்ததா அல்லது இல்லையா என்பதை நுகர்வோர் வீடுகளுக்கு சென்று சமைத்து உண்டால் தான் தெரிய வரும் என தெரிவிக்கப்படுகின்றது.ஷ
குறித்த இளைச்சிக்கடைகள் இவ்வாறான பண்டிகைக்காலம் மற்றும் அதறகு மறுநாட்கள் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நுகர்வோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments