உள்ளூராட்சி அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் இன்று கலந்துரையாடல்!!
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான முன்னாயர்த்தமாக உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் கட்சி செயற்பாடுகள் மற்றும் சமூக சேவையில் மக்களுடன் ஒன்றித்து பயணித்து கடந்த காலங்களில் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் போட்டியிட்ட பெண் உறுப்பினர்கள் மற்றும் எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கின்ற பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலும் கலந்துரையாடல் ஒன்று அக்கரைப்பற்று அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் கேட்போர்கூட மண்டபத்தில் இன்றைய தினம்(16) இடம்பெற்றிருந்தது.
பெண்களது உரிமைக்காக மன்னார் மாவட்டத்தில் இயங்கும் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மலையகம் ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிகளவு பெண்களை பங்குபற்ற செய்யும் நோக்கில் பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றது.
அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பிலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பங்கு கொள்ளும் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பிலும் இவற்றை இலகுபடுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு இதனடிப்படையில் பெறப்படும் அறிக்கைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் எவ்வாறான விடயங்களை உள்ளூராட்சி அரசியலில் ஈடுபடும் பெண்கள் தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் முன்கொண்டு செல்ல வேண்டிய நடிவடிக்கைகள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்படும்.
மன்னார் அபிவிருத்தி ஒன்றியத்தின் திட்டமிடல் ஒருங்கிணைப்பாளர். குசாந்தன் மகாலட்சுமி தலைமையில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டத்துக்கான மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் திருமதி வாணிசைமன் ஆலையடிவேம்பு பிரதேச சமூக செயற்பாட்டாளர் திருமதி அன்னலட்சுமி மற்றும் உள்ளூராட்சிமன்ற முன்னாள் மட்டக்களப்பு அம்பாறை உள்ளூராட்சி மன்ற பெண் பிரதிநிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments