Vettri

Breaking News

நாபீர் நற்பணி மன்ற ஸ்தாபகரை அரசியல் அதிகாரம் உள்ளவராக மாற்ற வேண்டும் -சட்டத்தரணி துல்சான்!!




 


பாறுக் ஷிஹான்

நாபீர் நற்பணி மன்றத்தினை எதிர்காலத்தில் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தி அதன்   ஸ்தாபகர் உதுமான்கண்டு  நாபீரை  அரசியல் அதிகாரம் உள்ளவராக அனைவரும் மாற்ற முன்வர வேண்டும் என   என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான துல்கர் நயீம் (துல்சான்) தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் நாபீர் நற்பணி மன்றத்தின்   மாவட்ட செயற்குழுக்கூட்டம்    ஈ.சி.எம் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கருத்துத்தெரிவிக்கையில்

எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் வறிய குடும்பத்தைச்சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென்ற அடிப்படை எண்ணப்பாட்டுடன் இருக்கின்றவர் நாபீர் நற்பணி மன்ற இஸ்தாபகர் உதுமாண்கட்டு நாபீர்.இவ்வாறான விடயங்களை விரைவாக முன்னெடுப்பதற்கு அரசியல் அதிகாரம் அவசியமாகும். அத்துடன், தொழில் பேட்டைகளை அமைத்து இதர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியிலும் அவர்  ஈடுபட்டு வருகின்றார்.
இது தவிர, வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு வீட்டுத்திட்டங்களை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையிலும் கவனஞ்செலுத்தி வருகின்றார்.
இதற்கெல்லாம் அரசியல் அதிகாரமானது இன்றியமையாதது.

எனவே, இவ்வாறான மக்கள் சேவகர்களை மக்கள் இனங்கண்டு எப்படி பாராளுமன்றம் அனுப்புவது?,  நாபீர்  நற்பணி மன்றத்தினை அரசியல் கட்சியாக மாற்றி எவ்வாறு முன்னோக்கிச்செல்வது? போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அனைத்துப்பிரதேசங்களையும் உள்ளடக்கிய பிரமுகர்களை,கொண்ட உயர்மட்ட ஆலோசனை சபை ஒன்றும் முடிவில் அமைக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இன்னும் சமூக சிந்தனையுள்ள புத்திஜீவிகள் பலரும் உள்வாங்கப்பட்டு இச்சபை இன்னும் விரிவாக்கப்படுமெனத் தெரிவித்தார்.

அங்கு கருத்துத்தெரிவித்த சட்டத்தரணி ஹாதி இஸ்மாயீல்,

சம்மாந்துறைப் பிரதேசத்திலே பாராளுமன்றப் பிரதிநிதித்துவமொன்று கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக வெற்றிடமாகக் காணப்படுகின்றது.
இங்கு ஆளுமைமிக்க ஒரு அரசியல் தலைமைத்துவம் இல்லாத காரணத்தால் இங்கே உள்ள வாக்குகள் பல்வேறு பக்கமும் பிரிந்து செல்கின்றது. அதனால் எந்தப்பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கின்றது.

எனவே, சம்மாந்துறை பிரதேசத்திலே ஒரு ஆளுமைமிக்க அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாமல் காணப்படுகின்றது. அதற்குப்பொருத்தமான ஆளுமைமிக்க அரசியல் தலைமைத்துவத்தை நாங்கள் தெரிவு செய்ய வேண்டும்.

அந்த அரசியல் தலைமைத்துவத்தை நாங்கள் இன்று அடையாளங்கண்டிருக்கின்றோம். கடந்த பல வருடங்களாக சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சமூக சிந்தனையாளர் கலாநிதி நாபிர் அவர்களை நாங்கள் ஒரு சிறந்த தலைமைத்துவமாக இனங்கண்டிருக்கின்றோம்.
எனவே, அவருடைய கரங்களைப் பலப்படுத்தி அவரை ஒரு அரசியல் அதிகாரதில் அமர்த்த வேண்டும். இவர் ஒரு சமூக சிந்தனையுள்ள சிறந்த மனிதர். இவரை நாங்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பினால் நிச்சயமாக சம்மாந்துறை பிரதேசம் அரசியல் எழுச்சி பெற்று சமூக அபிவிருத்தியில் ஒரு சிறந்த சமூகமாக உயர்வடையும் என்பது நிச்சயம்.

No comments