கண்டி மாவட்டம் கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை போலீசாரினால் மீட்கப்பட்டுள்ளார் .
இச்சம்பவம் இன்று(13) காலை 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளதுடன் தற்போது அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து மாணவி உட்பட அவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டு அம்பாறை சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் காரியாலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பாரை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்
கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு மாணவிகளில் ஒரு மாணவி கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ கடந்த சனிக்கிழமை (11) அன்று பகிரப்பட்டுள்ளது. அதிலொரு மாணவி தப்பிச் சென்றுள்ளார். எனினும், வாகனத்துக்குள் இழுத்து போடப்பட்ட மாணவியை காப்பாற்றும் முயற்சியில் இவ்வீதியில் சென்றவர் முயற்சித்துள்ளமை அந்த காட்சிகளில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments