Vettri

Breaking News

சாய்ந்தமருதில் தொடரும் அல்-ஹிலால், ஜீ.எம்.எம்.எஸ் ஆதிக்கம் : மகா வித்தியாலயம் அடங்களாக மூன்று பாடசாலைகள் பூச்சியம்





நூருல் ஹுதா உமர்

நடந்து முடிந்து அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது கல்வி கோட்டத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 92 மாணவர்கள் சித்தி பெற்றிருக்கிறார்கள்.

அதில் கமு/கமு/ சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயம்  231 மாணவர்கள் தோற்றி 49 பேரும் (21.65 %) கமு/கமு/ சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை 159 மாணவர்கள்  தோற்றி 31 பேரும் (19.5%) கமு/கமு/சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயம் 59 மாணவர்கள் தோற்றி 10 பேரும் (16.95%) கமு/கமு/சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் 21 மாணவர்கள் தோற்றி 01 மாணவர் (4.35%) கமு/கமு/றியாழுல் ஜின்னா வித்தியாலயம் 28 மாணவர்கள் தோற்றி 01 மாணவர் (3.57%) சித்தியும் பெற்றுள்ளார்கள்.

எட்டு பாடசாலைகளை கொண்ட சாய்ந்தமருது கோட்டத்தில் சாய்ந்தமருது கமு /கமு/ அல்- ஜலால் வித்தியாலயத்தில் இருந்து 35 மாணவர்களும், கமு /கமு/ அல் கமரூன் வித்தியாலயத்தில் இருந்து 33 மாணவர்களும், கமு /கமு/ மல்ஹர்ஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இருந்து 22 மாணவர்களும் பரீட்சைக்கு  தோற்றி எந்த மாணவர்களும் வெட்டு புள்ளிக்கு மேல் பெறவில்லை என்பதுடன் சாய்ந்தமருது கோட்டத்தில் கமு /கமு/ சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை சித்தி வீதத்தில் முதலிடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டதோடு வெட்டுப்புள்ளி க்கு மேல் அதிக மாணவர்கள் சித்தி பெற்று கமு/கமு/ சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயம் முதலிடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது

No comments