Vettri

Breaking News

குருக்கள்மடத்தில் விழாக்கோலம் பூண்ட பிரதேச பொங்கல் விழா!!!




 ( வி.ரி.சகாதேவராஜா)

களுவாஞ்சிக்குடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் மிகவும் பிரமாண்டமான தைப் பொங்கல் பெருவிழா மிகவும் சிறப்பாக நேற்று முன்தினம் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் மூன்று கட்டங்களாக கோலாகலமாக இவ் விழா பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
கலாசார விழுமியங்களுடன் பண்பாட்டு பவனியாக கொண்டுவரப்பட்ட நெற்கதிர்கள் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தை அடைந்ததும் சமய வழிபாடுகளுடன்  பாரம்பரிய முறையில்  உப்பட்டி அடித்து பொலிதூற்றப்பட்டு பின்னர் நெல் குற்றப்பட்டு பொங்கல் பானையில் புத்தரிசியிடப்பட்டு நிகழ்வுகள் இனிதே ஆரம்பமானது.

























No comments