அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதாரசேவைகள் பணிப்பாளர் விஜயம். அபிவிருத்திக் குழுவினருடன் விசேட கடந்துரையாடல்!!
செல்வி வினாயகமூர்த்தி
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் கண்கானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருடன் இன்று(18)விசேட கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் .எம்.சி.எம். மாஹீர் அவர்களும் அக்கரைப்பற்று பிரதேச வைத்திய சாலையின் பிரதேச வைத்திய அதிகாரி அப்துல் நசீர் மற்றும் வைத்தியர்கள் அபிவிருத்தி குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்
குறித்த கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அவசரமாக செய்து முடிக்க வேண்டிய வேலைத்திட்டங்களும் இனங்காணப்பட்டது. இது தவிர ஆளணி பற்றாக்குறை,அம்புலன்ஸ் வண்டியின் தேவைப்பாடு குறித்தும் ஆராயப்பட்டதுடன் குறித்த வைத்தியசாலையை வினைத்திறனுடனான சேவையை வழங்குவதற்கான மேலதீக நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.குறித்த வைத்தியசாலையை விசேட தேவையுடையவர்களுக்கான உடல்உள புனருத்தாபன நிலையமாக மாற்றுவதற்கான ஆலோசனைகளும் அதற்கான தேவைப்பாடுகள் பற்றியும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரால் முன்வைக்கப்பட்டதுடன் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
No comments