Vettri

Breaking News

செட்டிபாளையம் சிவன் ஆலயத்தில் பிரதான யாகசாலைக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு!!





( வி.ரி. சகாதேவராஜி)

இலங்கையிலேயே தென் திசை
நோக்கி தட்சிணாமூர்த்தியாக சிவலிங்க வடிவில் வேண்டுவோர் வேண்டியபடி அருள்பாலிக்கும் மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன்  ஆலயத்தில் பிரதான யாகசாலைக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நேற்று  (10) சிவ ஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் ஐயா அவர்களினால்  நட்டு வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் ஆலய தலைவர் மு.பாலகிருஸ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி ஆலயத்தில் குரோதி வருடம் தைத்திங்கள் 27 ஆம் நாள் (09.02.2025) ஞாயிற்றுக்கிழமை திருவாதிரை நட்சத்திர சுபமுகூர்த்த வேளையில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு
பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments