திருக்கோவிலில் தேசிய மக்கள் சக்தி மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு!
செ.துஜியந்தன்
அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நாளை ( 13-01-2025) திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட முன்னாள் வேட்பாளரும், தமிழ்பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஆர்.எம். அன்ரன் ஒழுங்கமைப்பில் திறந்துவைக்கப்படவுள்ள இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தோழர் மஞ்சுள ரத்னாயக, தோழர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். சிறப்பு அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி இணைப்பாளர் தோழர் ரவீந்திர குணவர்த்தன உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
No comments