Vettri

Breaking News

பெரிய நீலாவணையில் புதிய ஆலயம்! அன்பே சீரடி சாய்பாபா கோவில் மகா பால் காப்பு நிகழ்வு!




 ( வி.ரி. சகாதேவராஜா)


கல்முனையை அடுத்துள்ள பெரிய நீலாவணை அன்பே  சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகத்திற்கான பால் காப்பு நிகழ்வு நேற்று (18) சனிக்கிழமை நடைபெற்றது.

பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதேவேளை, கல்முனை பெரிய நீலாவணையில் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்றது.

பெரிய நீலாவணை வைத்தியசாலையை அண்மித்ததாக அன்பே சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.

நேற்று முன்தினம் 17/ 1/ 2025 வெள்ளிகிழமை மாலை சீரடி சாய்பாபா பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த மூன்று தினங்களும் பக்தர்களுக்கான அன்னதான நிகழ்வுகளையும், வறிய மக்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது .

சீரடி சாய்பாபா அடியார்கள் அனைவரும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து சாய்பாபாவின் அருளை பெற்றுக் கொள்ள அனைவரையும் அழைத்தனர்.








No comments