மருமகனுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை முரண்பாடு மோதலாக மாறி உயிரிழந்த மாமனாரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!
பாறுக் ஷிஹான்
மாமனாரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு-சம்மாந்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு
மருமகனுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை முரண்பாடு மோதலாக மாறி மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்னம்பிள்ளை கிராமம் பகுதியில் கடந்த புதன்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளது.
மேற்குறித்த தாக்குதலின் போது மத்திய வீதி மலையடிக் கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 55 வயது நபரே மரணமடைந்திருந்தார்.இதே வேளை மாமனாருடன் மோதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட மூதூர் பிரதேசம் ஆலிம்சேனை 02 பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரினால்
கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மரணமடைந்தவரின் மகளின் வாடகை வீட்டில் இடம்பெற்றுள்ளதுடன் பொலிஸாரின் 119 இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலம் பொலிஸாரினால் சம்பவ இடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு குறித்த மரணம் மோதலினால் தாக்கப்பட்டு மரணமடைந்தாரா அல்லது மாரடைப்பு காரணமாக நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.
இன்று குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணையை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் டி.கருணாகரன் மேற்கொண்டதுடன் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆர்.எம்.வி.வி.கே.ராஜகுரு gq;Nfw;Gld; மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த 2017 ஆண்டு மரணமடைந்தவருக்கு மாரடைப்பிற்காக சிகிச்சை வழங்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments