உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த வாய்ப்பு!!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த அதிக சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. அதனுடன் தொடர்புடைய நீதிமன்றத் தீர்ப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அந்தத் தீர்ப்பு ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.இந்நிலையில் சபாநாயகரால் அது தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்பட்ட பின்னர், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments