ஆடொன்றை கடித்துக் குதறிய நாய்க்கு மரண தண்டணை ;ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபை தீர்ப்பு!!
ஆடொன்றை கடித்துக் குதறிய நாய்க்கு மரண தண்டணை வழங்கி ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபை தீர்ப்பு வழங்கியுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
தனது ஆடொன்றை நாய் கடித்து குதறி விட்டதாக பொலிஸ் நிலையத்தில்,பெண்ணொருவர் முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை ஒட்டுசுட்டான் இணக்க சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இணக்க சபையிலிருந்த நீதவான்களான மூவரும் அந்த நாயைத் தூக்கிலிடுமாறு தீர்ப்பு வழங்கினர்.
இணக்க சபையிலிருந்த நீதவான்கள் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு நாயின் உரிமையாளரும் சம்மதித்துள்ளார். அதன் பின்னர் நீதவான்கள் நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அதன் புகைப்படத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments