Vettri

Breaking News

உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளம் குடும்பஸ்தர் பலி!!




 முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு, சுசுதந்திரபுரம் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றி வந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு உழவு இயந்திரத்துடன் சாரதி தப்பிச் சென்ற நிலையில் புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


No comments