நாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன.
அதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்றும் அடைமழை பொழிந்து கொண்டிருந்தது.
தாழ்நிலப் பிரதேசங்கள் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
அம்பாறை மஹாஓயா வீதியில் மங்களகம எனும் இடத்தில் பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அம்பாறை மஹாஓயா வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது .
இவ் வீதியால் ,போக்குவரத்துக்கு செய்வோர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துவது உகந்தது எனக் கூறப்படுகிறது.
No comments