ரஹ்மத் பவுண்டேசன் மூலம் நிந்தவூர் பிரதேசத்தில் பொதுக்கிணறு வழங்கிவைப்பு!!!
Asm.Arham
Journalist
Islamabad Reporter
நிந்தவூர் பிரதேசத்தில் பொதுமக்கள் பாவனைக்கு மிகவும் தேவைப்பாடாக பொதுக்கிணறுகள் இருப்பதாகவும் அதனை அமைத்துத்தருமாரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்பின் பெயரில் மிகவும் குறுகிய நாட்களுக்குள் இப்பொதுக்கிணறுகள் அமைக்கப்பட்டு பயனாளிகள் பாவனைக்காக திறந்து கையளித்து வைக்கப்பட்டது.
இதன்போது பயனாளிகளுடன், முக்கியஸ்தர்கள், அப்பிரதேசவாசிகள், நலன்வி்ரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
No comments