Vettri

Breaking News

தாராள உள்ளங்கள் அறக்கட்டளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு!!








( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை "தாராள உள்ளங்கள் அறக்கட்டளை"யின் புதிய அலுவலக திறப்புவிழா  கல்முனை   வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள   கட்டடத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வு அறக்கட்டளையின் தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது,, 

பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.புனிதன் மற்றும் சிறப்பதிதியாக முன்னாள் கணக்காளர் கே.மகேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் மாணவர்களும் கலந்து கொண்டனர்,, 

இதில்  மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவிதிட்டங்கள் தொடங்கப்பட்டதுடன் நிர்வாக உறுப்பினர் முன்னாள் அதிபர்  புனிதனுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம் பெற்றது.

No comments