Vettri

Breaking News

கல்முனை கடற்கரை பூங்கா மற்றும் அதனை அண்டிய கரையோர பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஆதம்பாவா எம்.பி!!








பாறுக் ஷிஹான்

கல்முனை கடற்கரை பூங்கா மற்றும் அதனை அண்டிய கரையோர பிரதேசத்திற்கு  பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான  ஏ. ஆதம்பாவா வியாழக்கிழமை(2) மாலை   கள ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க  அதிகாரிகளின் அசமந்த போக்கினால் காலம் தாழ்த்தப்பட்ட கடற்கரை பூங்கா மற்றும் அதனை அண்டிய கரையோர அபிவிருத்திகளை பார்வையிட்டார்.

அத்துடன்  பாதிக்கப்பட்ட   மக்களினால் முன்வைக்கப்பட்ட பல  பிரச்சினைகளுக்கு உடனடி  தீர்வினை வழங்கும் வகையில் உரிய அதிகாரிகளை குறித்த இடத்திற்கு வரவழைத்து   உடனடி நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


அத்துடன் அப்பகுதியில் இடம்பெறும்  கடல் அரிப்பினை தடுக்கும் வகையில் தடுப்புக்கற்கள் இடுவதற்குரிய வேலைகள் உடனடியாக ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும்   பாராளுமன்ற உறுப்பினர் அவ்விடத்தில் இருந்து  உரிய அமைச்சுகளினுடனும் அதிகாரிகளுடனும் தொடர்பை ஏற்படுத்தி மேற்கூறிய அபிவிருத்தி  நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கல்முனை பதில் பிரதேச செயலாளர்  சட்டத்தரணி ரி.எம்.எம்.  அன்சார் கல்முனை மாநகர சபையின்  பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி
கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்  உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

No comments