Vettri

Breaking News

சமையல் எரிவாயு சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டவர் கைது!!





பாறுக் ஷிஹான்
வீடு ஒன்றில் இருந்து சூட்சுமமான முறையில் சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிச்சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஸ் ஸாலிஹாத் மகளிர் அறபுக் கல்லூரி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த சமையல் எரிவாயு சிலிண்டரை திருடியதாக சந்தேகத்தில் 21 வயதுடைய சந்தேக நபரை 24 மணித்தியாலத்தில்  பொதுமக்களின் உதவியுடன்    சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் இத்திருட்டு சம்பவத்தில் கைதான சம்மாந்துறை  செந்நெல் கிராமம் பகுதியைச் சேர்ந்த 21 சந்தேக நபரை தடுத்து வைத்து   மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments