காரைதீவு அரசடி பிள்ளையாருக்கு முதன்முறையாக இடம்பெற்ற கலச சங்காபிஷேகம்!!!
( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு முச்சந்தி விபுலானந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் அரசடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கலச சங்காபிஷேகமானது முதல் முறையாக நேற்று (21.01.2025) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிழக்கின் பிரபல பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில், ஆலய குரு சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் கிரியைகள் பூஜைகள் நடைபெற்றன.
பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வினை சிறப்பித்து பால்குட பவனியானது காலை 9:30 மணி அளவில் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஆலயத்தினை வந்தடைந்து மூல மூர்த்திக்கு கலச சங்காபிஷேகம் இடம்பெற்றது.
No comments