Home
/
இலங்கை செய்தி
/
இலங்கை செய்திகள்
/
பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை !!!
பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை !!!
செ.துஜியந்தன்
2025 ஆம் ஆண்டின் புதுவருடம் அதனைத்தொடர்ந்து வரும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆகியன எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளது. இதனையிட்டு என்றுமில்லாத வகையில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை வரவேற்க தயாராகிவருகின்றனர்.
நாட்டிலுள்ள பெரும்பாலான நகரங்களில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சில இடங்களில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் வர்த்தகர்கள் ஈடுபட்டிருப்பதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் நுகர்வோரை அசெளகரியங்களுக்குட்படுத்தும் வர்த்தகர்கள் தொடர்பில் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் பல்வேறு சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பாக 1977 எனும் இலக்கத்திற்கு அல்லது அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகாரசபையின் 063 2222355 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர், விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாதோர், காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோர், முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவு உபகரணங்களை வைத்திருத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களால் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை !!!
Reviewed by Thanoshan
on
1/04/2025 07:31:00 AM
Rating: 5
No comments