Vettri

Breaking News

75 வருட வரலாற்றில் மிகவும் பின்தங்கிய மல்லிகைத்தீவில் அபார கன்னிச் சாதனை! இரண்டு மாணவிகள் புலமைப் பரிசில் சித்தி!!!




 (வி.ரி. சகாதேவராஜா)


 சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட 75 வருடகால மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவிகள் சித்தி அடைந்துள்ளார்கள்.

 மல்லிகைத்தீவு  அ.த.க.பாடசாலையின் அதிபர் எஸ்.ஜதீஸ்வரா இத்தகவலை நேற்று ஊர்ஜிதப்படுத்தினார். 

உருத்திரமூர்த்தி சபிக்ஷனா என்ற மாணவி 144 புள்ளிகளையும், ராஜு சஞ்ஷனா என்ற மாணவி 146 புள்ளிகளையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர் .

அதிபர் ஜதீஸ்வரா கருத்துத் தெரிவிக்கையில்..
 பாடசாலையின் 75 வருட கால வரலாற்றில் முதல் தடவையாக இந்த இரண்டு மாணவிகள் சித்தி அடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் . போக்குவரத்து வசதி ரியூசன் வசதி இல்லாத இப் பகுதியில் படைத்த இச் சாதனை எமக்கு பெருமையை தேடித் தந்துள்ளது. இவர்களை 
உருத்திரமூர்த்தி ஆசிரியர் கற்பித்தார்.

மாணவர்கள் பெற்றோர்கள் உதவிய ஏனைய ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார்.




No comments