இன்று விபுலானந்தா மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு பவள விழா பிறந்த நாள் நிகழ்வுகள்;பொங்கல், கேக் வெட்டலுடன் கோலாகலமாக ஆரம்பம்!
(வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் 75 ஆவது வருட பவள விழா பிறந்த நாள் நிகழ்வுகள், பொங்கல் மற்றும் கேக் வெட்டலுடன் கோலாகலமாக ஆரம்பமாகியது.
இந் நிகழ்வு இன்று (15) புதன்கிழமை அதிபர் ம. சுந்தரராஜன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
1950.01.15 இல் ஆரம்பிக்கப்பட்ட இக் கலாசாலையின் 75 வது வருட பவளவிழா கல்லூரி தின நிகழ்வுகள் முன்னதாக பால் பொங்கலுடன் ஆரம்பித்தது.
அதிதிகளாக, கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன், காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஆ. சஞ்சீவன், பாடசாலை பழைய மாணவர் சங்க ஆலோசகர் ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ரி. வினோதராஜா, பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் எல்.சுலக்ஷன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
75 வது வருட பிறந்த நாள் கேக் வெட்டல் நிகழ்வு பட்டாசு வாண வெடிகள் முழங்க, பலவர்ண பட்டாசு மழை தூவ, மாணவர்களின் கரகோஷம் மண்டபத்தை அதிரவைக்க மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
அதிதிகள் ஆசிரியர்கள் கேக் பரிமாறி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.
இந்நிகழ்வில் அதிதிகள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பழைய மாணவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் 75ம் ஆண்டு நிறைவு பவளவிழாவினை (1950-2025) சிறப்பிக்கும் வகையில் நிகழ்வுகள் பல தொடர்சியாக இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments