கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டு விழா!!
(Asm.Arham )
இம்முறை நடந்து முடிந்த தரம் 5 ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டு விழா இன்று (31) கமு/அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் MA.Salam அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வை பஹ்ரியன்ஸ் 98 மற்றும் பழைய மாணவர்கள் இனைந்து நடத்தினர். இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்களால் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை பாடசாலை நிர்வாகத்தினர் , பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கம், பஹ்ரியன்ஸ் 98 உறுப்பினர்கள் ஆகியோரால் சிறந்த முறையில் இடம்பெற்றது. மேலும் இந் நிகழ்விற்கு ஊடக அனுசரணை வழங்கிய மிஹ்ராஜ் தொலைக்காட்சி குழுமத்தினருக்கு இந் நிகழ்வு ஏற்பாடு குழுவினர் மற்றும் பாடசாலை அதிபர் நன்றி தெரிவித்தனர்.
No comments