Vettri

Breaking News

5 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பு!!




 5 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் இன்று (30) முதல் அமலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் மற்றும் கோதுமை மாவின் விலை தலா 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் புதிய விலை  220 ரூபாய். ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் புதிய விலை ரூ.165 ரூபாயாகும். ஒரு கிலோ கிராம் வெள்ளை சர்க்கரையின் விலை  5 ரூபாவால் குறைக்கப்பட்டதால், அதன் புதிய விலை  235 ரூபாயாகும்..

ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை ரூ.3 குறைக்கப்பட்டதால், அதன் புதிய விலை  285 ரூபாயாகும், இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பருப்பின் விலை  1 ரூபாவால் குறைக்கப்பட்ட பிறகு, அதன் புதிய விலை  209 ரூபாயாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments