Vettri

Breaking News

புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை அல். அஸ்ஹர் வித்தியாலயத்தில் இருந்து 45 மாணவர்கள் வெட்டுப்புள்ளி க்கு மேல் பெற்று சாதனை..




 நூருல் ஹுதா உமர்


வெளியாகியுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய கமு/கமு/ அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் 45 மாணவர்கள் வெட்டுப்புள்ளி க்கு மேல் பெற்று சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.


2024 தரம் 5 புலமைப் பரீட்சையில் கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் 197 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி, 45 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக புள்ளி பெற்று சித்தி அடைந்துள்ளனர். 70 புள்ளிகளுக்கு அதிகமாக 95.85% மாணவர்கள் புள்ளிகளை பெற்று சித்தியடைந்திள்ளனர்.


134 தொடக்கம் 138 இடையிலான புள்ளிகளை 12 மாணவர்கள் பெற்றுள்ளனர். பாடசாலை அதிபர் ஏ.எச்.அலி அக்பரின் சிறப்பு வழிகாட்டலின் கீழ் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பயிற்சி ஊக்குவிப்பினால் அதிக மாணவர்கள் சித்தியடைந்ததுடன் இம்முறை பாடசாலையில் அதிகூடிய புள்ளியாக 179 புள்ளியை எம்.எஸ்.எம்.ஹாதிம் எனும் மாணவன் பெற்று சாதனை படைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது


No comments