Vettri

Breaking News

கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருக்கோவில் காற்றாடித் திருவிழா 25 இல்..




 ( வி.ரி.சகாதேவராஜா) 


கனமழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருக்கோவில் 
7வது காற்றாடித் திருவிழாவும் 
DJ இசை நிகழ்ச்சியும்
எதிர்வரும் 25 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.

தமிழர்களின் நன்னாளான தைத்திருநாளை முன்னிட்டு அன்றையதினம் நடைபெறவிருந்தமை தெரிந்ததே. எனினும் 
அக் காலப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இப் பட்டத் திருவிழா திருக்கோவில் பொது மக்களின் ஏற்பாட்டில் பிரபல சமூக செயற்பாட்டாளரும், SSK CONSTRUCTION நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமாரின்  பூரண அனுசரணையில் நடைபெறவிருக்கிறது.

 திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுதசுவாமி  ஆலயக் கடற்கரை முன்றலில் இக் காற்றாடித் திருவிழா 
 25  January 2025
பிற்பகல் 3 மணிதொடக்கம் இரவு 10 மணிவரை நடைபெறவிருக்கிறது.

அவ் விழாவில் தேசிய மட்ட சாதனையாளர் ஒருவரும், விளையாட்டில் சாதனை படைத்த மாணவர் ஒருவரும் பரிசு வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறார் என
பட்டத் திருவிழா அமைப்பினர் 
தெரிவித்தனர்.


No comments