லீட் த வே முன்பள்ளி பாடசாலை மாணவர் விடுகை விழா-2024
சாய்ந்தமருதில் அமைந்துள்ள முன்னணி முன்பள்ளிப் பாடசாலையான
லீட் த வே முன்பள்ளி பாடசாலையின் 11 ஆவது வருடாந்த மாணவர் விடுகை விழா நிறுவனத்தின் பணிப்பாளர் IM.உவைஸ் அவர்களின் தலைமையிலும் பாடசாலையின் அதிபர் M. பாத்திமா பர்ஸானா அவர்களின் நெறிப்படுத்தலிலும் டிசம்பர் 31 ஆம் திகதி சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அந்நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் அதிதிகள் கௌரவிப்பு என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் MM. ஆசிக் அவர்களும் கௌரவ அதிதிகளாக
MHM.ஹனீப்
ஸாபித் & கோ பிரைவட் லிமிடெட்
MM.நியாஸ்
ஆசிரியர் மல்ஹருஸ் ஷம்ஸ் வித்யாலய
MM சிராஜ்
சிரேஷ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம்
Y.திருப்பதி
முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர்
சாய்ந்தமருது
AM.ஆயிஷா
முன் பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர்
கல்முனை
NMS.சிறீன்
பிரதேச செயலகம் கல்முனை கலந்து மாணவர்களுக்கு கௌரவத்தினை வழங்கி நிகழ்வை சிறப்பித்தனர்.
No comments