அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம்!!
பாறுக் ஷிஹான்
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை (19) தலைவர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் மாளிகைக்காடு வாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி எச்.எம்.ஏ.ஜி.திலகரட்ன கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.ஜெகன், மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சி நிறுவக பிரதம போதனாசிரியர் பி.நரேந்திரனும், விசேட அதிதியாக இலங்கை சுதந்திர தபால் தொழில்வல்லுனர்கள் சங்க பொதுச் செயலாளர் மஞ்சுள பெர்ணான்டோ, அகில இலங்கை தமிழ்பேசும் அஞ்சல் ஊழியர்கள் சங்க முன்னளர் தலைவர் எஸ்.சிவநேசராஜ் ,உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மத அனுஸ்டானம், மறைந்த அங்கத்தினர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் வரவேற்புரை எம்.சி.எம். இர்பான் மேற்கொண்டார்.
கடந்த வருடாந்த பொதுக்கூட்ட அறிக்கையை பொதுச் செயலாளர் எம்.ஜே.எம் சல்மான் மேற்கொண்டு வருடாந்த அறிக்கை மற்றும் தீர்மானங்களை அறிவித்தார்.
இதனை தொடர்ந்து வருடாந்த கணக்கறிக்கை பொருளாளர் யு.துஷான் சமர்ப்பித்து உரையாற்றினார். பொதுச்செயலாளரின் உரை இடம்பெற்றது.அஞ்சல் அதிபர் கே.எப்.றிப்கா கவிதை ஒன்றினை வாசித்தார்.
சங்கத்தின் தலைவர் தேசமான்ய யூ.எஸ்.எம். பைஸர் ஜே. பி தலைமையுரையுடன் காதல் கவிதை ஒன்றினையும் வாசித்தார். . அங்கத்தவர்களுக்கான நேரம் வழங்கப்பட்டது.தொடர்ந்து கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி எச்.எம்.ஏ.ஜி.திலகரட்ன பொன்னாடை மற்றும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

No comments