வரிப்பத்தான்சேனை லீடரில் 05 மாணவர்கள் புலமைப் பரிசில் சித்தி!!
( வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயத்தின் இறக்காமம் கோட்டத்திலுள்ள வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் பாடசாலையில் இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 5 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி அடைந்துள்ளனர் என்று அதிபர் நிஹால் உமறுகத்தா தெரிவித்தார்.
முகம்மது மக்வூல் அல்பர் சயான் -159, முகம்மது றிபாய் ஆக்கிப் அகமட்-148, நுபைல் ஹைபா கைஸ்-145, முகம்மது ஜெஸீம் அகமட் ஹனீப் -145, முகம்மது சியான் ஆஹில் அஹ்னப்-144 ஆகியோர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை தேடித் தந்த மாணவர்கள் ஆகும்.
சாதனை மாணவர்கள் பா.அ.ச. உறுப்பினர்களால் மாலை அணிவித்து ஏனைய மாணவர்கள் முன்னிலையில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கற்பித்த ஆசிரியை ஏ.எம்.மஃபியா ஏ.சி.அப்றோஸ் ஜஹான் ஆகியோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் கோட்டக் கல்வி பணிப்பாளர் யூ.எல்.மஹ்மூதுலெவ்வை, பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.சியாத்,EPSI இணைப்பாளர் ஏ.எம்.கியாஸ்(ISA) ,SDEC செயலாளர் AB.ரப்ஜாத்(DO) உப செயலாளர் Y.B.M.சியான்(DO)SDEC உறுப்பினர்களான ஜும்ஆ பள்ளிவாசல் பொருளாளர் M.S.சாதிக் அமீன், மற்றும் ஏ.எம்.அஸ்மின்(தொழிலதிபர்) ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
வரிப்பத்தான்சேனை லீடரில் 05 மாணவர்கள் புலமைப் பரிசில் சித்தி!!
Reviewed by Thanoshan
on
1/26/2025 10:49:00 AM
Rating: 5
No comments