மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா வின் 03ம் ஆண்டு நிறைவு விழா!!
(பாறுக் ஷிஹான்)
03ம் ஆண்டு மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்காவின் நிறைவு நிகழ்வு தனியார் விடுதியில் சனிக்கிழமை (11) நடைபெற்றது.
மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா அமைப்பின் பணிப்பாளர் எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ஐ. எல். எம். இர்பான், அமைப்பின் ஆலோசகர்களான மேஜர். கே. எம். தமீம், கெப்டன். எம். டி. நௌஷாத், எம். அஸீஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். ஐ. எம். சம்சுதீன், எம். எஸ். அகமட், சிராஜுன் முனீரா, அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக அமைப்போடு இணைந்து பணியாற்றிய அமைப்பின் பிரதேச அமைப்பாளர்கள், துறை சார்ந்த தலைவர்கள , உயர்பீட உறுப்பினர்களுக்கு நியமன ஆணைப்பத்திரம் , அடையாள அட்டை, உத்தியோக பூர்வ சீருடை அறிமுகம், செய்து வைக்கப்பட்டதுடன் மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா அமைப்பின் செயலாளர் ஐ. பாத்திமா நஸ்லாவின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.
No comments