காரைதீவு HDO பாலர் பாடசாலை மாணவர்களின் 20வது விடுகை விழா !!
காரைதீவு HDO பாலர் பாடசாலையின் விடுகை விழாவானது வெள்ளிகிழமை (13)இன்று பி.ப 2.30 மணியளவில் திருமதி.சசிகரன் மிதுர்ஷிகா( தலைவி- பெற்றார் குழு HDO பாலர் பாடசாலை) தலைமையில் விபுலானந்தா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கெளரவ அதிதிகளாக திரு.ஏ.சுந்தரகுமார்(செயலாளர்- பிரதேச சபை காரைதீவு), ஜனாப்.ஐ.எல்.எம்.அனிஸ்( வெளிக்கள உத்தியோகத்தர் EES பணியகம்- அக்கரைப்பற்று), ஜனாப்.ஐ.எம்.ஏ.எம்.ரஷீம்(ADE- ZDEO கல்முனை), திரு. வினோஜ்குமார் (இளம் கண்டுபிடிப்பாளர்- சம்மாந்துறை) மற்றும் திருமதி.R.D.B.ஹல்ஹாரி( முகாமையாளர்- RDB வங்கி நிந்தவூர்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து சிறப்பு அதிதிகளாக ஜனாப்.எம்.ஐ. ரியாழ்( உதவி இணைப்பாளர், HDO காரைதீவு), போதகர்.பி.விஸ்வநாதன்( மக்கள் தேவர் சபை, காரைதீவு), திரு.ஏ.மோஹேஸ்வரன்( Proprietor- Kanishka Compost(pvt) சந்திவெளி), ஜனாப்.ஏ.ஜெஸ்மீர்(ECDO- பிரதேச செயலகம் காரைதீவு), திருமதி.ஆர்.எஸ்தராணி( கிராம சேவகர், காரைதீவு) மற்றும் திருமதி.ரவீந்திரன் சிவதர்ஷினி( முன்னாள் செயலாளர்- HDO பாலர் பாடசாலை முகாமைத்துவ குழு, காரைதீவு) ஆகியோர் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து பாலர் பாடசாலை மாணவர்களின் பாடல்கள், நடனங்கள் போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
No comments