Vettri

Breaking News

ஹரீஸ் எம்பியின் D-100 திட்டத்தினூடாக கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையில் அன்னதான மண்டபம் திறப்பு!






நூருல் ஹுதா உமர்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் D-100 திட்டத்தினூடாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையின் அன்னதான மண்டப திறப்பு விழா இன்று (28) கல்முனை பிரதேச செயலாளர் டி.எம்.எம் அன்சார் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், மாணிக்கமடு ரஜமகா விகாரையின் விகாராதிபதி சீலாரத்தன தேரர் ஆகியோரின் பிரசன்னத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு விகாரையின் அன்னதான மண்டபத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா, அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம் சாஹிர், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எஸ்.விஜிகரன், கே.எல் சபீக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சுமார் 5 மில்லியன் ரூபாய் நிதியில் இவ் அன்னதான கட்டிடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments