எலி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!!
நூருல் ஹுதா உமர்
எலி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது.பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால், சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பூச்சியல் ஆய்வுக் குழுவின் பொறுப்பாளர் சுகாதார பூச்சியியல் உத்தியோகத்தர் கே.ஏ.ஹமீட் தயாரித்த வருடாந்த பூச்சியியல் ஆய்வறிக்கை இந்த மீளாய்வு கூட்டத்தின் போது வெளியிடப்பட்டது. இதன் பிரதிகளை பிராந்திய பணிப்பாளர், தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஆகியோருக்கு பூச்சியல் உத்தியோகத்தர் ஹமீட் வழங்கி வைத்தார்.
No comments