இந்திய சந்நியாசிகளுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு!!
( வி.ரி.சகாதேவராஜா)
இந்தியாவில் இருந்து வருகை தந்த பகவத்கீதையை உலகெலாம் எடுத்துச் செல்லும் கீதா அமிர்தானந்த ஜீ மற்றும் ஐந்து மாதாஜீக்களுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா திருநெல்வேலி மதுரை சாரதா ஆச்சிரம சன்னியாசிகளான சண்முக பிரியாம்பா, கதாதர பிரியாம்பா, நீலகண்ட பிரியாம்பா, சதாசிவ ப்ரியாம்பா, துர்கா பிரியாம்பா ஆகிய ஐந்து மாதாஜி களும் அவருடன் வந்திருந்தார்கள். மேலும் இந்தியா தமிழ்நாட்டுச் சேர்ந்த 20 கீதா இலக்கிய அன்பர்களும் கலந்து கொண்டிருந்தார்கள் .
காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இவர்களை வரவேற்று விசேட பூஜை இடம் பெற்றது .
அதன் பின்பு அவர்களது ஒன்று கூடல் சந்நிதானத்தில் இடம் பெற்றது .
அங்கு ஆலய தர்மகத்தா இரா.குணசிங்கம் வரவேற்புரை நிகழ்த்த ஆலய தர்மகர்த்தா எஸ்.நமசிவாயம் உள்ளிட்ட ஏனைய ஆலய தலைவர்கள் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்திய அணியுடன் வருகை தந்த அமெரிக்காவில் வாழும் சிறுமியின் நடனமும் இடம் பெற்றது.
இந்திய சந்நியாசிகளுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு!!
Reviewed by Thanoshan
on
12/10/2024 01:02:00 PM
Rating: 5
No comments