அடுத்த வாரம் மீண்டும் மழையுடன் கூடிய கால நிலை!!
மழையுடன் கூடிய கால நிலை அடுத்த வாரம் மீண்டும் இடம்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைவாக எதிர்வரும் 9ஆம், 10ஆம், 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் மழையின் அளவு அதிகரிக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க: தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் தீவுகள் அருகே மீண்டும் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அதனால், இதன் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அறிக்கை தொடர்பில் பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
No comments