ரணவீம" நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காரைதீவில் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு நிகழ்வு!!
நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் "ரணவீம" நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காரைதீவு 4ம்,09ம் கிராம நிலதாரி பிரிவுகளில் நிறைவடைந்த வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன் தலைமையில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளராக இருந்து அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்று சென்ற சிவஞானம் ஜெகராஜன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு "ரணவீம" நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை திறந்து வைத்தார்.
இதன் போது காரைதீவு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.எம். அச்சு முஹமட், பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ரீ. தவேந்திரன், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
No comments