இலங்கையின் வடக்குக் கரையை அண்டியதாக தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம்!!
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழுமுக்க மண்டலம் தொடர்ந்தும் மேற்கு – வடமேற்குத் திசையில் மெதுவாக நகர்வதோடு, அது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்குக் கரையை அண்டியதாக தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வட மாகாணத்தின் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது
நாட்டின் ஏனைய பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடற்றொழிலாளர்கள் அவதானம்
இன்று (12) புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, கடல்சார் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் கடலில் பயணம் செய்வோர் மற்றும் மீனவ சமூகத்தினர் அறிவுறுத்தப்படுகின்றார்கள்
No comments