Vettri

Breaking News

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட இந்து அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியர் , உதவி பொறுப்பாசிரியர்களுக்கான கருத்தரங்கு




 இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட இந்து அறநெறிப்பாடசாலை  பொறுப்பாசிரியர் , உதவி பொறுப்பாசிரியர்களுக்கான  கருத்தரங்கு 

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப்  பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30மணிக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு சிவ.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றதுடன்  

இக்கருத்தரங்கிக்கு அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் 103 அறநெறிப்பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்கள் உதவி ஆசிரியர்கள்  கலந்து கொண்டதுடன்  கருத்தரங்கினை அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி  நடாத்தினார்

இக்கருத்தரங்கில் ஆராயப்பட்ட விடயங்களான 

பாடசாலை பதிவேடு

ஆசிரியர் குறிப்பேடு

மாணவர்களின் குறிப்பேடு

அறநெறிப்பாடசாலை வழிகாட்டல் நூல்

பண்ணிசை கருவிகள் வழங்கப்பட்ட விடயங்கள்

குருபூசை நிகழ்வுகள் 

பாடத்திட்டம் தொடர்பான தெளிவூட்டல்

ஆசிரியர் சீருடை விளக்கம்

மாணவர் சீருடை விளக்கம்

மாணவர்களின் வருகையை  அதிகரிக்க செய்தல்

தளபாடகொடுப்பனவு

யோகாசனம்,பண்ணிசை கொடுப்பனவுகள்

ஆக்கத்திறன் போட்டிகள் 

பெற்றோருக்கான கருத்தரங்கு, கூட்டுப்பிரார்த்தனை,

இறுதியாண்டு பரீட்சைக்கு மாணவர்களை  விண்ணப்பித்தல்  தொடர்பான விளக்கம்,

தர்மாசிரியர்பரீட்சை விளக்கம்,

சுவாமி விபுலாநந்த மகாநாடு விளக்கம்,

2025ம் ஆண்டிக்கான வேலைத்திட்டம்  

மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான 2025ம் ஆண்டிற்கான பாடசாலை பதிவேடு  வழங்கி வைக்கப்பட்டதுடன் அம்பாறை மாவட்ட சகல பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.













No comments