எலிக்காய்ச்சலை ஆரம்பத்தில் கண்டறிந்து குணப்படுத்த முடியும்!!
எலிக்காய்ச்சலை ஆரம்பத்தில் கண்டறிந்து குணப்படுத்த முடியும். Doxycycline தடுப்பு மருந்தும் உள்ளது என பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் வியாழக்கிழமை (12) நள்ளிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டு நவம்பர் மாதம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆகும்.
டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 12ம் திகதி இரவு 11 மணி வரை எலிக்காய்சல் என சந்தேகிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ,பெறுகின்ற நோயாளர்கள் எண்ணிக்கை 58 ஆகும். இதில், 1ஆம் திகதி 9ஆம் திகதி வரை -13 பேரும்,10ம் திகதி முதல் 11ம் திகதி வரை 29 பேரும், 12ம் திகதி - 16 பேரும் சிகிச்சை பெற்றனர்.
எலிக்காய்சல் என சந்தேகிக்கப்பட்டு வியாழக்கிழமை (12)சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் -16 பேர், தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள் இருவர், யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட வர் ஒருவர்.
வியாழக்கிழமை (12) வைத்தியசாலையில் கர்ப்பிணி பெண்கள்-இருவர் உள்ளடங்கலாக 28 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
இதுவரை இறந்தவர்கள் 7 பேரில் பலர் எலிக்காய்ச்சலால் இறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் இறந்தவர் ஒருவர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு இறந்தவர்கள் -5 பேர் பருத்தித்துறை -3 பேர்,வரணி-ஒருவர் ,கரவெட்டி ஒருவர்
முல்லைத்தீவை வசிப்பிடமாக கொண்டவர் நாவற்குழியில் தற்காலிகமாக வசித்த போது நேரடியாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர் ஒருவர்.
வைத்தியசாலை ஊழியர்களுக்கும் வெளி நோயாளர் பிரிவில் வெளிநோயாளர்களுக்கும் எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து Doxycycline வியாழக்கிழமை (12) வழங்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ,கரவெட்டி சாவகச்சேரி ,மருதங்கேணி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் நேரடி கண்காணிப்பின் மூலமும் தடுப்பு மருந்து வழங்கல் மூலமும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கிறது.
எலிக்காய்ச்சல் பரவலின் தீவிரத்தை குறைக்க முன்னெச்சரிக்கை முன்ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு விட்டன.தற்காலிக விடுதி திறக்கப்பட்டுள்ளது . தேவையான மருந்துகள் இருக்கின்றன.
மேலதிக மருந்துகள் MSD இலிருந்து எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக தேவைப்படும் மருத்துவர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் சுகாதார ஊழியர்களுக்கான கடமை ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.வைத்தியசாலை வினைத்திறனாக இயங்குகிறது.
எனவே மக்கள் பயம் கொள்ள தேவையில்லை எந்நேரமும் மருத்துவமனையை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments