Vettri

Breaking News

சுனாமி அனர்த்தத்தில் உயிர் இழந்த உறவுகளை நினைவு கூரும் துஆ பிரார்த்தனை!





பாறுக் ஷிஹான்

திகமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவினால்  ஏற்பாடு செய்யப்பட்ட சுனாமி அனர்த்தத்தில் உயிர் இழந்த உறவுகளை நினைவு கூரும் துஆ பிரார்த்தனை  வியாழக்கிழமை(26)  அக்பர் ஜும்மா பள்ளி வாசலில் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு  நடைபெற்றது.

இந் நிகழ்வில் பொது மக்கள்  உலமாக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை வரலாற்றில்   பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு   20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடாளவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில்   காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன்  இது தொடர்பான மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments