செல்லச் சிட்டுக்களின் சிங்காரக் கொண்டாட்டம் !!
மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 54 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் ( 12.) கல்லடிஉப்போடை சுவாமி விபுலானந்தர் மணி மண்டபத்தில் இடம்பெற்றது.
"செல்லச் சிட்டுக்களின் சிங்காரக் கொண்டாட்டம்" எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆன்மீக அதிதிகளான ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் முகாமையாளர் நிலமாதவானந்தாஜீ மகராஜ் மற்றும் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி உமாதீஷானந்தஜி மகாராஜ் முன்னிலையில் நிகழ்வு இடம் பெற்றது ,
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக பிரதேச செயலக முன் பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.மேகராஜ் மற்றும் பாலர் பள்ளிப் பணியக வெளிக்கள உத்தியோகத்தர் பா. பரணீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இதன்போது சிறார்களின் ஆடல், பாடல் பேச்சு மற்றும் புராண நாட்டிய நாடகங்கள் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பங்கேற்ற செல்ல சிட்டுகள் அனைவருக்கும் அதிதிகளால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கபட்டார்கள்
பிரதேச வாழ் பொது மக்களும் , சிறார்களின் பெற்றோர்களும் நிழல்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
No comments