இன்றைய வானிலை!!
நாட்டின் சில பகுதிகளில் இன்று சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
No comments