Vettri

Breaking News

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு தின நிகழ்வும் குருதிக்கொடையும் !






நூருல் ஹுதா உமர் 

சமூக நல விடயங்களில், மனிதாபிமான ரீதியாக சிறப்பாக இயங்கும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சுனாமி அனர்த்த தினத்தின் இருபதாவது நினைவு முன்னிட்டு ஏற்பாடு செய்த சுனாமி நினைவு தின நிகழ்வும், குருதிக்கொடையும் இன்று (26) வியாழக்கிழமை மாளிகைக்காடு மத்தி தோணா வீதியில் அமைந்துள்ள ஜனாஸா நலன்புரி அமைப்பின் கட்டிடத்தில் நடைபெற்றது.

சுனாமியில் மரணித்த ஸுஹதாக்களை நினைவு கூர்ந்து நடைபெறும் இந்த இரத்த தான முகாமை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

இந்த இரத்த தான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ய ஆர்வமுள்ள அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர். 

இந்த இருபதாவது சுனாமி நினைவு தின குர்ஆன் தமாம், துஆ பிரார்த்தனை, விசேட சொற்பொழிவு, குருதிக்கொடை நிகழ்வில் உலமாக்கள், காரைதீவு பிரதேச செயலக அரச அதிகாரிகள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments