பெருந்தோட்ட பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளராக கலாநிதி சிவப்பிரகாசம் நியமனம்!!
(வி.ரி. சகாதேவராஜா)
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் ஆலோசகருமாக கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமை ஆய்வாளரும், சிறந்த கல்விமானும்,
தேசிய மக்கள் சக்தியின் மலையக தேசிய குழு உறுப்பினருமான கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் நாடளாவிய ரீதியில் அளப்பரிய சேவையாற்றி வரும் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் ஸ்தாபகராவார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் எஸ். பிரதீப் கலாநிதி சிவப்பிரகாசத்திற்கான நியமன பத்திரத்தை நேற்று முன்தினம் பணிமனையில் வைத்து வழங்கிவைத்தார்.
இவர் தேசிய மக்கள் சக்தியின் மலையக மக்கள் சம்மந்தமான கொள்கைத்திட்டம் மற்றும் செயற்பாட்டு திட்டம் என்பவற்றை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகித்தவர்.
அத்துடன் மலையக மக்களின் மாற்றத்திற்காக மிகுந்த பங்களிப்பு செய்தவர்.
இவரது நியமனம் எதிர்காலத்திலே மலையக மக்களுக்கான அபிவிருத்தியில் சிறந்த மாற்றங்கள் ஏற்றபடும் என எதிர்பார்க்கின்றோம் என மலையக மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
No comments