Vettri

Breaking News

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் பிரதேசங்களுக்கு நேரடி விஜயம் செய்தார் அஷ்ரப் தாஹிர் எம்.பி!!





(எஸ். சினீஸ் கான்)

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான வயல் நிலங்கள், வடிச்சல் வாய்க்கால் மற்றும் சிதைவுகளுக்குள்ளான வீதிகள் போன்றவற்றை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (08)  நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விவசாயிகள், வட்டை விதானைமார் ஆகியோரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சிதைவுக்குள்ளாகிவரும் வீதிகளினை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

No comments