Vettri

Breaking News

மட்டக்களப்பில் படகு கவிழ்ந்ததில் மீனவ குடும்பஸ்தர் பலி!!




 

மட்டக்களப்பில் படகு கவிழ்ந்ததில் மீனவ குடும்பஸ்தர் பலி; இன்று காலை இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் பாதுகாப்பாக மீட்பு!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒரு பலியாகியுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு (12) மீன்பிடி நடவடிக்கைக்காக படகு மூலம் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களும் மீண்டும் இன்று (13) காலை 6.00 மணியளவில் கரைக்கு திரும்பும் போது முகத்துவாரப் பகுதியில் இவ்வாறு படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் மற்றவரை தேடும் நடவடிக்கையில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திராய்மடுவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய நபரே பின்னார் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரனையினை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments