Vettri

Breaking News

ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழா புதனன்று திருமலையில்!!




( வி.ரி. சகாதேவராஜா)

தவிர்க்க முடியாத காரணங்களால் இரு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியவிழா நாளை மறுநாள் 11 ஆம் தேதி புதன்கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 கடந்த மூன்று வருடங்களாக விருது பெறத் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள்  அனைவரும் அங்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவிருக்கின்றனர் .

திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில்  காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்  ஜயந்த லால் ரத்னசேகர கலந்து சிறப்பிக்க உள்ளார்.

மேற்படி விழா தொடர்பாக முன்னைய  திகதியும் இடமும் மட்டுமே மாற்றமடைந்துள்ளன, ஏனைய நிகழ்வுகள் யாவும் முன்னர் திட்டமிடப்பட்டது போன்று நடைபெறும் என்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார்.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வரும் கலைஞர்களுக்கு விசேட போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

சகல மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் அதற்காக நடவடிக்கை எடுக்குமாறும் மேலதிக விபரங்களுக்கு திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments