Vettri

Breaking News

மாவடிப்பள்ளி ஊரின் பெயர் பலகை காட்டு யானைகளளால் சேதம்!பிரதேசவாசிகள் விசனம்!




{ முஹம்மத் மர்ஷாத் }

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஆறு குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமான சம்பவத்தைத் தொடர்ந்து அம்பாரை மாவட்டத்தின் மாவடி பள்ளி பிரதேசம் பலரின் கவனத்தையும் ஈர்த்த பிரதேசமாக மாறியுள்ளது. 

இந்நிலையில் மாவடிப்பள்ளி பிரதேசத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது.  குறித்த மாவடிப்பள்ளி பிரதேசத்தின் பெயர் பலகை தெளிவின்மை காரணமாக வெளியூரிலிருந்து வருபவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் .

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பெயர் பொறிக்கப்பட்ட நவீன பெயர் பலகை அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி எல்லைப் பகுதிகளில் ஏலவே நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த பிரதேசத்தில் சிறு போக நெல் அறுவடை முடிவடைந்து இருக்கும்  காலப்பகுதியில் காட்டு யானைகள் ஊரை நோக்கி படையெடுத்து வருவது எல்லோரும் அறிந்த விடயமே.

இருந்தும் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் வருகின்ற யானைகளால் குறித்த பெயர்ப்பலகை முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன.

தற்போது குறித்த பெயர் பலகை தெளிவின்மை இப் பிரதேச இம்மக்களுக்கு வேதனை தரும் விடயமாக இருந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெயர்ப் பலகையை  சீர்செய்ய சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் பிரதேச வாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments