Vettri

Breaking News

நாளை கல்ப தரு தினம்! மட்டு. இ.கி.மிஷனில் ஏற்பாடு!!




( காரைதீவு  நிருபர் சகா)

 ராமகிருஷ்ண மிஷினில் நாளை (1) புதன்கிழமை 138 வது கல்பதரு தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.

1886.01.01 இல் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் உலகிற்கு தெய்வீக அருளை அளித்த உன்னதமான நாள். அவரது சிஷ்யர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நாள்.
வேண்டியதை வழங்கும் கல்பதரு நாளை இராமகிருஷ்ண மிஷன் உலகளாவிய ரீதியில் சிறப்பாக அனுஸ்டிப்பது வழமை.

அந்த வகையில் மட்டக்களப்பு கல்லடி ராமகிருஷ்ண ஆச்சிரமத்தில் நாளை(1) புதன்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் பஜனை இடம்பெறும் .8 மணிக்கு ஆராத்ரிகம் இடம்பெற இருக்கிறது.

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் கல்பதரு தினம் அங்கு நடைபெற உள்ளது.

இறைவன் கல்பதரு. அவரிடம் யார் எதை விரும்புகிறாரோ அது கிடைக்கும். ஆனால் கல்பதருவின் அருகில் சென்று கேட்க வேண்டும். அப்போதுதான் வேண்டியது கிடைக்கும். இறைவன் இதயத்து உணர்வையே ஏற்றுக் கொள்கிறார். எதைக் கருத்திற் கொண்டு சாதனை செய்கிறானோ அதுவே அவனுக்கு கிடைக்கிறது.

*-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்*

No comments